இந்திய அணிக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட 20க்கு 20 தொடரை ஆஸ்திரேலிய அணி, 2க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றிருந்த நிலையில், நேற்று இடம்பெற்ற இரண்டாவதும் இறுதியுமான போட்டியிலும் 7 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களைப் பெற்றது.
191 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி, க்ளென் மெக்ஸ்வெல்லின் அதிரடியான ஆட்டத்தினால் 19.4 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
55 பந்துகளில் 9 ஆறு ஓட்டங்கள், 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 113 ஓட்டங்களை க்ளன் மெக்ஸ்வெல் பெற்றுக்கொடுத்தார்.
0 comments:
Post a Comment