கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் இன்று நாட்டி வைக்கப்பட்டது.
இதன்போது, மருத்துவமனைக்கென 50 மில்லியன் பெறுமதியான ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களும் பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரால் கையளிக்கப்பட்டன.
அமைச்சர்களான வஜிர அபேயகுனவர்தன, ரிசாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம். ஹரிசன், சாகல ரத்னாயக்க, இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சிறிதரன், சித்தார்த்தன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள்அதிகாரிகள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment