மகள்-மருமகன் பிரச்சனை - தந்தை சாவு

மகள்-மருமகன் பிரச்சனையின்போது தள்ளிவிடப்பட்ட தந்தை  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த பரிதாபச் சம்பவம்  அங்குணுகொலபெலஸ்ஸ - அவாரியகம பிரசேத்தில் நடந்துள்ளது.

தனது மகளுக்கும், மருமகனுக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலையை சமரசப்படுத்துவதற்காக இவர் தலையிட்ட போதே இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்குணுகொலபெலஸ்ஸ மருத்துவனையில் சேர்க்கப்பட்ட  குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 64 வயதான நபரே உயிரிழந்துள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து, வருகின்றனர்.




Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment