மக்களிடம் இராணுவம் நிதி சேகரிக்கவில்லை - தர்ஷன ஹெட்டியாராச்சி

இந்துக் கோவில்களைப் புனரமைப்பது உட்பட எந்தவொரு வேலை திட்டத்துக்கும் யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தால் நிதி சேகரிக்கப்படவில்லை. இவ்வாறு  யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.


பலாலியில் உள்ள பிள்ளையார் கோவிலின் புனரமைப்புப் பணிகளுக்காக சீருடை அணிந்த இராணுவத்தினரால் சுன்னாகத்தில் உள்ள வர்த்தக நிலையங்களில் நிதி சேகரிக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதற்கு மறுப்புத் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இந்துக் கோவில்களைப் புனரமைப்பது உட்பட எந்தவொரு வேலைத் திட்டத்துக்கும் யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தால் நிதி சேகரிக்கப்படவில்லை. மாறாக தென்னிலங்கை மக்களிடமிருந்து கிடைக்க பெறும் நிதி பங்களிப்புகள் மூலமாகவே எமது மனித நேய வேலைத் திட்டங்கள் யாழ்.மாவட்டத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன.

யாழ். மாவட்ட தளபதி என்கிற வகையில் நாம் அறிந்த வரையில் நிச்சயமாக இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெறுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பமும் கிடையாது.  அந்த மாதிரியான நிதி சேகரிப்புக்கு எந்த மாதிரியான சூழ்நிலையிலும் நாம் உத்தரவிடவே இல்லை.

எது எப்படி இருந்தாலும் இராணுவத்தின் பெயரைப் பயன்படுத்தி எவரேனும் யாழ். மாவட்டத்தில் நிதி சேகரிப்பில் ஈடுபடும் பட்சத்தில் உடனடியாக யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்துக்கு தெரியப்படுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம். என்றுள்ளது.

Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment