வேலூரில், திருட வந்ததாக அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பொது மக்களால் அடித்து கொலை. காவல் துறை விசாரணை.
கே.வி.குப்பம் அடுத்த கொசவன் புதூர் பகுதியில் உள்ள கலாநாதன் நாயுடு என்பரின் வீட்டு கதவை நேற்று நள்ளிரவு சந்தேகத்திர்கிடமாக வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் தட்டியுள்ளனர். சந்தேகம் அடைந்த கலாநாதன் போன் மூலம் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த உறவினர்களை பார்த்ததும் 3 பேரும் தம்பியோடியுள்ளனர். இவர்களை விரட்டி பிடிக்கும் போது குஜனன் கர்சல்(33) என்வரை பிடித்து திருட வந்ததாக கூறி மரத்தில் கட்டிப்போட்டு பொது மக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சமபவ இடத்திலேயே குஜனன் கர்சல் உயிரிழந்துள்ளார். இதையடுத்து இச்சம்பவம் வெளியில் தெரியாமல் இருக்க உடலை அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த கே.வி.குப்பம் காவல் துறையினர் கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment