கொழும்பு சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட நோயாளர் காவு வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பின்னர் உத்தியோக பூர்வமாக நேற்றையதினம் கையளிக்கப்பட்டன.
நாடு முழுவதும் மாகாண ரீதியாக சுமார் 200 க்கும் மேற்பட்ட நோயாளர் காவு வண்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வு கொழும்பில் கடந்த மாதம் இடம்பெற்றது.
மாவட்டப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் அதிகாரிகள் ,மற்றும் மாகாண பணிப்பாளர்கள் சகிதம் இந்த நிகழ்வுக்குச் சென்று வண்டிகளைப் பெற்றனர்.
வடக்கு மாகாணத்துக்கு 17 நோயாளர் காவு வண்டிகள் கிடைத்தன. இவற்றில் 16 சாதாரண நோயாளர் காவு வண்டிகளும் , அதி கூடிய வசதிகள் கொண்ட நோயாளர் ஒரு வண்டியும் அடங்கும்.
முல்லைத்தீவு 2,மன்னார் 3,வவுனியா 1,கிளிநொச்சி 3,யாழ்ப்பாணத்துக்கு 8 வண்டிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
வழங்கப்பட்ட தினத்திலிருந்து வண்டிகள் சேவையில் ஈடுபட்டுள்ளன.ஆனால் அதனை கையளிக்கும் நிகழ்வு கைதடி முதலமைச்சர் அமைச்சு வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,மாகாண சபை உறுப்பினர்கள் ,மருத்துவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment