தெமடகொட எரிபொருள் கூட்டுத்தபான தலைமையகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அரஜூன ரணதுங்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
25 ஆயிரம் ரூபா ரொக்க பிணை மற்றும் 10 லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அமைச்சரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்ததைத் தொடர்ந்து ஒருவர் உயிரிழந்தார்.
0 comments:
Post a Comment