“தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் திருட்டு விசிடி ஒழிக்க முடியும்.” அதனை அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது என தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் தெரிவித்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வரை சந்தித்து இளையராஜா75 நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் செயத்தியாளர்களை சந்தித்த விஷால்.
இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கு நன்றி. பார்திபனுடைய ஏற்பாட்டின் பேரிலே இளையராஜா பாட ஏ.ஆர் ரஹிமான் கீ போர்ட் இசைத்தார். 12 மணிவரை நிகழ்ச்சி நடைபெற்ற நிகழ்சியில் 25000 பேர் பங்கேற்றனர். அனைவரையும் நிகழ்சிக்கு அழைத்தோம். பெரும்பாலான நடிகர் நடிகைகள் வரவில்லை. ஜூன் ஜூலையில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா நடைபெறும். தமிழக அரசை கடவுளாக நம்புகிறோம் அரசு நினைத்தால் ஒரே நாளில் திருட்டு விசிடியை ஒழிக்க முடியும் என்று அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து...
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர் கே செல்வமணி முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன அறக்கட்டளைக்கு பையனூரில் தமிழக அரசு இடம் அளித்திருந்தது. இதில் அம்மா படப்பிடிப்பு தளம் கட்டிட அடிக்கல் நாட்டு விழா மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளன்று (பிப் 24 ) அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்காக முதல்வருக்கு நேரில் அழைப்பு விடுத்தோம் என்று அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment