மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறுகோரி நாளைய தினம் கேகாலை மாவட்டத்தில் போராட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மாகந்துரே மதூஷை கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாக தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, அர்ஜுன் மகேந்திரனைக் கைதுசெய்ய ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை எனவும் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி கடந்த நான்கு ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வருகின்றது.
இந்த நிலையில், நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனைக் கைது செய்ய ஏன் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத் கேள்வி எழுப்பியுள்ளார்.
0 comments:
Post a Comment