கீர்த்தி சுரேஷூக்கு பெரும் புகழைப் பெற்று தந்த படம் 'நடிகையர் திலகம்'.
இதேபோன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படம் ஒன்றில், கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக நடிக்கவுள்ளார்.
கீர்த்தி சுரேஷின் 20 ஆவது படமாக அமையும் இந்தப் படத்தை, தெலுங்கு இயக்குனர் மகேஷ் கொனரு இயக்கவுள்ளார்.
இப்படத்திலும் கதையின் நாயகியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கில் குடும்பப் பின்னணி கதையில் உருவாகிறது.
கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தைச் சுற்றியே மொத்த கதையும் பயணிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 10 ஆம் திகதி முதல் ஐதராபாத்தில் தொடங்குகிறது.
0 comments:
Post a Comment