ஆவா குழு உறுப்பினரின் வீட்டில் தாக்குதல்!



யாழில் இயங்கும் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபர்களின் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மானிப்பாய் கட்டப்பாலி ஒழுங்கையில் உள்ள குறித்த வீட்டின் மீது நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தமது முகத்தை துணியால் மூடி கட்டியவாறு வீட்டினுள் புகுந்து வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மூன்று மோட்டார் சைக்கிள்களையும் அடித்து உடைத்து சேதமாக்கி தீயிட்டு கொளுத்தி விட்டு தப்பியோடியுள்ளனர்.

Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment