யாழ்.நாகவிகாரை விடுதியின் மலக் கழிவுகள் முழுமையாக வடிகாலுக்குள் விடப்படுவதால் நகரப் பகுதியில் பெரும் சுகாதாரச் சீர்கோடு ஏற்பட்டுள்ளதாக மாநகர சபை உறுப்பினர் சிலர் தெரிவித்துள்ளனர்.
சுகாதார சீர் கேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பலதடவை வலியுறுத்திய போதும் நடவடிக்கை எடுக்க யாழ்.மாநகர சபை மறுத்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
யாழ்.மாநக சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வ.பார்த்திபன், எஸ்.தனுஜன் ஆகியோரினாலேயே மேற்படி குற்றச்சாட்டு முன்னவைக்கப்பட்டுள்ளது.
விடயம் தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில்,
மாநகர சபை நிர்வாகத்திற்கு பல தடவைகள் இது குறித்து அறிவுறுத்தப்பட்டது. நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கூறியுள்ள போதும், நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர்.
யாழ்.நகரப் பகுதியில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தக் கூடியவகையில் வெளிப்படையாக மலக் கழிவுகள் திறந்து விடப்படுகின்றது.
இதனைத் தடுப்பதற்கு குறித்த கடிகாலுக்குள் மலக்கழிவு வெளியேற்றுவதற்காக வரும் குழாய் நிரந்தரமாக எங்களால் அடைக்கப்படும்-என்றனர்.
0 comments:
Post a Comment