மதவாச்சி சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட சிறைக் கைதிகள் இருவர் தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த கைதிகளை நேற்று சிறைச்சாலை பேருந்தில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முற்பட்ட வேளை இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
மதவாச்சி பூனேவ பிரதேசத்தைச் சேர்ந்த பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள 24 வயதுடைய கைதி ஒருவரும், மதவாச்சி, மககனதராவ பிரதேசத்தைச் சேர்ந்த பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவருமே தப்பிச் சென்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற கைதிகளை மீண்டும் கைது செய்வதற்காக மதவாச்சி பொலிஸார் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment