யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் அதிகளவான கஞ்சா கடந்த சில தினங்களாகக் கைப்பற்றப்பட்டு வரும் நிலையில், அவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ‘ஒப்பரேசன் கஞ்சா’ நடவடிக்கை பொலிஸாரால் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தின் வேறு மாவட்டங்களிலிருந்து 100 பொலிஸார் இதற்காக களமிறக்கப்படவுள்ளனர்.
யாழில் கடந்த இரண்டு வாரங்களுக்குள் 200 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டது. இன்னும் பல்வேறு இடங்களிலும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாருக்கு இரகிசயத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் ‘ஒப்பரேசன் கஞ்சா’ நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
காங்கேசன்துறைப் பிராந்தியத்துக்கு உள்பட்ட வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, அச்சுவேலி, இளவாலை ஆகிய 4 பொலிஸ் பிரிவுக்கும் உட்பட்ட பகுதிகளில் பொலிஸார் களமிறக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment