தலைக்கவசம் அணியாமல் மாணவர்களை உந்துருளிகளில் ஏற்றி வந்தவர்களுக்கு பொலிஸாரால் ஆயிரத்து 100 ரூபா தண்டமாக அறவிடப்பட்டது.
யாழ்.சாவகச்சேரி முன்னணிப் பாடசாலைகள் முன்னால் நிற்கும் சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் கண்காணிப்பில் போக்குவரத்துப் பொலிஸார், தலைக்கவசமின்றி மாணவர்களை உந்துருளியில் ஏற்றி வந்த 25க்கு மேற்பட்டவர்களுக்கு சம்பவ இடத் தண்டம் அறவிட்டுள்ளனர்.
பாடசாலை மாணவர்களுக்கு தலைக்கவசம் தேவையில்லை என்பதால் வழமை போல் மாணவர்களுக்கு தலைக்கவசம் அணியாமல் பாடசாலைக்கு அழைத்து வந்த போது பொலிஸாரால் இவர்கள் பிடிக்கப்பட்டனர்.
சாவகச்சேரி நகரில உள்ள முன்னணிப் பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிவரும் போது தலைக்கவசம் அணிவதில்லையென முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, இந்தத் திடீர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment