குறித்த அறிக்கை கடந்த 16ஆம் திகதி தமக்கு கிடைத்ததாக, மன்னார் மனித புதைக்குழி அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
அன்றைதினம் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
எனினும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவித தகவல்களையும் வெளியிட முடியாது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், அந்த அறிக்கை இன்றைய தினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அகழ்வுப் பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள பீட்டா ஆய்வுக் கூடத்தில் கார்பன் பரிசோதனைக்காக கடந்த மாதம் 25 ஆம் திகதி, கையளிக்கப்பட்டது.
அத்துடன், குறித்த மனித புதைகுழியில் இருந்து தொடர்ச்சியாகவும் மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது வரை 146 நாற்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளின் போது 323 மனித எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றில் 314 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட எச்சங்களில் 28 எச்சங்கள் சிறுவர்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment