ஓமானில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மலைப் பாதையில் பயணிக்கும் போது இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாக ஓமான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன விபத்தில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த தாயும் இரண்டு பிள்ளைகளும் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த கணவனும் இன்றுமொரு பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பொத்துவில்லை சேர்ந்த மற்றுமொரு பிள்ளையும் இறந்துள்ளதாக தெரியவருகிறது.
0 comments:
Post a Comment