சிவகார்த்திகேயன் தயாரித்த 'கனா' படத்தில் விவசாயியாக ஒரு கனமான கதாபாத்திரத்தில் நடித்தவர் சத்யராஜ். அடுத்து 'தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அநீதிக்கு எதிராகப் போராடுபவராக, நேர்மையான பொலிஸ் அதிகாரியாக என்று பல்வேறு பாத்திரங்களில் நடித்துள்ள சத்யராஜுக்கு 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரமாம். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் தீரன் இயக்குகிறார்.
''சமுதாயத்தின் மீது ஒரு தனி மனிதனுக்கு இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்திய 'வெட்னஸ் டே' இந்திபடப் பாணியில் இந்தப் படத்தை உருவாக்குகிறார்களாம். தீர்ப்புகள் விற்கப்படும் என்று வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்பு சர்ச்சைக்கு உரியதாக இருக்கிறது.
ஆனாலும் கதைக்கு மிகவும் அவசியமாக இருப்பதால் இப்படியொரு தலைப்பை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படத்தை திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு படப்பிடிப்பு வேலைகளை ஆரம்பித்துள்ளர்.
0 comments:
Post a Comment