புதுச்சேரி முதலியார் பேட்டை 100 அடி சாலையில் மக்கள் பயன்பாட்டிற்காக மேம்பாலம் அமைக்கும் பணி மூன்று வருடங்களுக்கு மேலாக நடைபெற்றது.
இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்து கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மக்களின் பயன்பாட்டிற்காக இருவழி சாலையாக புதுச்சேரி அரசு சார்பில் திறக்கப்பட்டது. அவ்வப்போது இப்பாலத்தில் விரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருந்ததால் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது பாலத்தின் நடுப்பகுதியை இணைக்கும் இடத்தில் மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அச்சத்துடன் அந்தப் பகுதியை கடந்து செல்லும் நிலை உருவாகியுள்ளது.
இதனை கண்டித்தும், பாலத்தினை மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்தியும் ஆம் ஆத்மி கட்சியினர் மேம்பாலத்தின் கீழே தூக்குப்போட்டு தொங்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#AAP #AamAadmiParty #PudhucheryBridge #IndianProtest #IndianParties #BridgeDamage #DMK #ADMK #BJP #Congress #TamilNewsKing
0 comments:
Post a Comment