இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தியதா பாகிஸ்தான்???

காஸ்மீரின் பத்காம் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிக் ரக போர் விமானம் ஒன்று காரெண்ட் கலான் கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் இன்று காலை 10.00 மணியளவில் விழுந்து நொறுங்கியதில் விமானம் இரண்டாக உடைந்து தீப்பற்றி எரிந்ததில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த விமானியின் நிலை என்ன ஆனது என தெரியவரவில்லை என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.  விபத்து நடந்த பகுதியருகே இருந்து ஒருவரது உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளதுடன் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்திய வான் எல்லைக்குள் நுழைய முயன்ற 2 பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானங்கள் திருப்பி தாக்கியதால் திரும்பி சென்றுள்ளன. திரும்பி போகும்போது போர் நிறுத்த ஒப்பந்த பகுதியில் பாகிஸ்தான் விமானங்கள் 4 இடங்களில் குண்டு வீசியதாகவும் பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 3 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்ற இந்திய விமானப்படை விமானம் நவ்சார பகுதியில் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்திய ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந் நிலையில் கைபர் பகுன்குவா மாநிலத்திலுள்ள பாலகோட் பகுதியில் இந்திய விமானங்கள், நேற்று காலை நடத்திய தாக்குதலில் குறைந்தது நான்கு பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாகிஸ்தானில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் பாகிஸ்தான் வான் பரப்பில் இரு இந்திய விமானப்படை விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனெரல் ஆசிஃப் கஃபூர், இன்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#PakistanAirForceOurPride #PulwamaAttack #SurgicalStrike2 #IndiaWar #PakistanWar #IndoPakistanWar #IndiaPakistan #ArmyBase #Modi #NarendraModi #IndiaStrikesPakistan #Surgicalstrike #IndianAirForce #IndiaStrikesBack #TamilNewsKing

Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment