புதையல் தோண்டிய புலிகளின் தளபதி கைது!

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை நேற்று இரவு கைது செய்துள்ளதுடன் இயந்திரம் ஒன்றை மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர். 

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எஸ்.எஸ்.சமிந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் சம்பவதினமான நேற்று இரவு 7 மணியளவில் குறித்த காட்டு பகுதியை சுற்றிவழைத்து தேடுதலின் போது புதையல் தோண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 8 பேரை கைது செய்ததுடன் புதையல் தோண்டுதலுக்க பயன்படுத்திய இயந்திரம் ஒன்று உட்பட அலவாங்கு மண்வெட்டி உட்பட உபகரணங்களை மீட்டு கரடியனாறு பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். 

இதில் கைது செய்யப்பட்டவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் மற்றும் சிங்களவர் ஒருவர் உட்பட ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 




Share on Google Plus

About Kayathri

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment