அரசியல் கைதி ஒருவர் பிணையில் விடுவிப்பு

நான்கு வருடங்கள் அரசியல் கைதியாக இருந்த  குடும்பப் பெண் ஒருவர் கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றால் பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளார்.

பெண்ணின் குடும்பம் சார்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு வழக்குக்கான முன்னெடுப்புக்களை முன்னெடுக்கப்பட்டு  வந்தது.

முல்லை.மாவட்டத்தின் விஸ்வமடு கிராமத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளுக்குத் தாயான திருமதி ரவீந்திரன் மதனி (வயது 31) கடந்த 10..03.2014 ஆம் ஆண்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டிருந்தார்.

வெலிமடை பொலிஸாரால் பதவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றில் குறித்த பெண்ணுக்கு எதிரான  வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

தண்டணைக் கோவை 443, 369, 394 ஆகிய சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு இருந்ததுடன், கண்ணிவெடி அகற்றும் பொருள்களைக் கையாண்டமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குக்கான தீர்ப்பு கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றில் இன்று வழங்கப்படும் என எதிர்பார்த்த போதும், வழக்கை விசாரித்து வந்த நீதவான் ரி.ஜெ.பிரபாகரன் இடம்மாற்றம் பெற்றுள்ளதால், கோவை தீர்ப்புக்காக அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருந்தும் அரசியல் கைதி கெப்பரிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றில்
சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். சந்தேக நபர் சார்பாக மூத்த சட்டத்தரனி வீ.எஸ்.நிரஞ்சன் முன்னிலையானார்.

மன்னார் மாவட்டப் பிரஜைகள் குழுத் தலைவர் அருட்பணி  ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் தலைமையில் ஆளுனர் சபையைச் சேர்ந்த அருட்பணி கே.ஜெகதாஸ் அடிகளார், ஐனாப்.எம்.சீ.எம்.றம்சீன், கொன்சால்வாஸ் கூஞ்ஞ ஆகியோரும் அரசியல் கைதியின் நலன்நோக்கி மன்றில் சமூகமளித்திருந்தனர்.

கைதியை 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையில் விடுவிக்க நீதவான்
கட்டளை பிறப்பித்தார். மன்னார் மாவட்ட பிரஜைகள் சந்தேக நபரை
பிணையில் எடுப்பதற்கு நிதி உதவி வழங்கியது.

எதிர்வரும் 27 ஆ திகதி (27.02.2019) தீர்ப்புக்காக வழக்கை நீதவான்
ஒத்தி வைத்தார். அன்று இதற்கான தீர்ப்பு கிடைக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.


Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment