மாணவர்கள்மீது தாக்குதல் ; பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முதலைக்குடா மாணவர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்து மாணவர்கள் மற்றும் ளும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலைக்குடா மகாவித்தியாலய  விளையாட்டுப்போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. அதன் ஒருகட்ட முனைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நேற்றுப் போட்டிகள் நடைபெற்றன.


மைதானத்துக்குள் திடீரென புகுந்த சிலர்,  விளையாட்டில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். 5 மாணவர்கள் பாதிக்கப்பட்டு மகிழடித்தீவு பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மாணவர்கள் மீது தமது காட்டு மிராண்டித் தாக்குதலை மேற்கொண்டவர்களை உடன் கைதுசெய்யுமாறு கோரியும்,  விடயத்தில் பொலிஸார் துரிதமாகச் செயற்படக் கோரியும் பாடசாலையின் வாயிற் கதவை மூடிப் பதாகைகளை ஏந்திவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


“பாரபட்சமின்றி பாதிக்கப்டப்ட மாணவர்களுக்கு நீதிவழங்கு, மாணவர்களைத் தாக்கியவர்களை உடன் கைது செய், முன்னேறும் வலயம் இது முதுகில் குத்தாதே!“ உள்ளிட்ட பல வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இதனையடுத்து கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் குழுவினர் நிலைமையை ஆராயந்து, ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினர்.

பாடசாலை மாணவர்களைத் தாக்கியவர்கைள கைது செய்வதாக உத்தரவாதமளித்துள்ளனர். பின்னர் மாணவர்களும், பெற்றோரும் கலைந்து சென்றனர்.

Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment