கொக்கைன் பயன்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியல் இதுவரை எனக்கு கடிதம் மூலம் கிடைக்கவில்லை. இவ்வாறு சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று காலை நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போதே சபாநாயகர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 24 பேர் கொக்கைன் உள்ளிட்ட போதைப் பொருள்களை பயன்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி மூலம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளாராம்.
எனினும், அவர்களின் பெயர் பட்டியலை கடிதம் மூலம் தருமாறு ரஞ்சன் ராமநாயக்கவிடம் சபாநாயகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை சபாநாயகர் அலுவலகம் அண்மையில் அறிவித்திருந்தது.
0 comments:
Post a Comment