இந்தியா, நெல்லை மாவட்டத்தில் இறந்த மூதாட்டி ஒருவரின் உடலை அரிவாளால் வெட்டி சாப்பிட்ட 43 வயதுடைய முருகேசன் என்பவரை ஊர்மக்கள் மடக்கிபிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது கடந்த சில நாட்களாகவே சுடுகாட்டில் புதைக்கப்படும் பிணங்களை யாரோ ஒருவர் சாப்பிடுவதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு அதிர்ச்சி தகவல் பரவியது. இதனால் அனைவரும் பீதியில் உறைந்து போய் இருந்துள்ளனர்.
இந் நிலையில் இறந்த ஒரு மூதாட்டியின் உடலை சுடுகாட்டில் தகனம் செய்துவிட்டு திரும்பியுள்ளார்கள். ஒரு சிலர் மட்டும் அந்த மர்ம நபரை பிடிப்பதற்காக மறைவான இடத்தில் அமர்ந்துள்ளார்கள். அப்போது வேகமாக அரிவாளுடன் அங்கு வந்த முருகேசன், தீயை அணைத்துவிட்டு பிணத்தை சாப்பிட ஆரம்பித்துள்ளான். உடனே அவரை மடக்கி பிடித்து பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் திருமணம் ஆகி போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று தெரியவந்துள்ளது. இந் நிலையில் பொலிஸாரினால் சென்னை கீழ்பாக்கம் அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment