இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் 25 ஆவது தலைவர் மற்றும் புதிய செயலரை தேர்தெடுக்கும் வாக்குப் பதிவுகள் இன்றையதினம் இடம்பெறவுள்ளன.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகத்திலும் குறித்த வாக்குவதிவுகள் இடம்பெறவுள்ளன.
ஜனாதிபதி சட்டதரணி காலிங்க இந்ரதிஸ்ஸ மற்றும் சிரேஷ்ட சட்டதரணி மஹிந்த லொகுகே ஆகியோர் தலைவர் பதவிக்காக, போட்டியிடுவதாக, சட்டதரணிகள் சங்கத் தற்போதைய தலைவர், ஜனாதிபதி சட்டதரணி யூ.ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.
செயலர் பதவிக்காக, தற்போதைய செயலர் சட்டதரணி கௌஷல்யா நவரத்ன மற்றும் சட்டதரணி சமன் வெலிஅங்கே ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.
வாக்கு பதிவுகள் நாடுமுழுதிலும் உள்ள 84 நீதிமன்ற வளாகங்களில், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறும் என சட்டதரணிகள் சங்கத்தின் தற்போதைய தலைவர், ஜனாதிபதி சட்டதரணி யூ.ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment