ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான தேசிய அரசாங்கத்தை அமைப்ப தற்கு, எதிர்க்கட்சி மற்றும் பிற அரசியல் கட்சிகளின் சில உறுப்பினர்களின் எதிர்ப்பின் விளைவாக தடைகள் ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவை சார்ந்தே தேசிய அரசாங்கத்தை அமைப்ப தற்காக அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என்பது தொடர்பாக முடிவெடுக்கப்படவில்லை.
இந்நிலையில் தேசிய அரசாங்கத்தை அமைக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் முடிவு தள்ளிப்போயுள்ள நிலையில், முதலில் வரவுசெலவு திட்டமே தமது இலக்கு என அக்கட்சி கூறியுள்ளது.
இதேவேளை தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலான நடைமுறை விதிமுறைகள் தொடர்பாக ஆராய்ந்த பின்னரே இது குறித்த முடிவை அறிவிப் போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளார்.
மேலும் அதை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளது என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேசிய அரசாங்கம் அமைப் பதில், ஐக்கிய தேசிய கட்சிக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான பிரேரணை ஒன்றை நாடாளுமன்ற ஒப்புதலுக்காக, ஐ.தே.க சமீபத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வழங்கியிருந்தமை குறிப்பிட த்தக்கது.
0 comments:
Post a Comment