நியூடெல்லா நிறுவனம் பிரான்சிலுள்ள தனது தொழிற்சாலையின் உற்பத்தியை நிறுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ரொட்டி மற்றும் பாண் போன்ற உணவுகளுக்கு ஜாமுக்கு பதிலாக பூசி உண்ணப்படும் சொக்லேட் கலந்த நியூடெல்லா ஸ்ப்ரெட்
என்னும் பொருள் உலகப் புகழ் பெற்றது.
உலகம் முழுவதிலும் அதன் சுவைக்கு பலர் அடிமை என்றே சொல்லலாம். இந்த நிலையில் இத்தாலிய நிறுவனமான நியூடெல்லா வட பிரான்சின் Villers-Ecalles பகுதியில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையின் தயாரிப்பை நிறுத்தியுள்ளது.
தொழிற்சாலையின் தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், நியூடெல்லா ஸ்ப்ரெட் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருள்களில் குறைபாடு இருப்பதைக் கண்டு பிடித்துள்ளனர். இதையடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்ப்ரெட் என்ற குறித்த பொருள் தங்கள் தரத்திற்கு ஏற்றதாக இல்லாததையடுத்து தற்காலிகமாக இந்த உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment