யாழ்.உரும்பிராய் பகுதியில் பெண்மணி ஒருவரை அடித்துக்கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான சகோதரர்கள் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
யாழ்.மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து, இருவரும் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 6 மாதத்துக்குள் உரும்பிராய் பகுதியில் வயதான பெண்மணி ஒருவர் கோடாரியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மகனைத் தேடிச் சென்று தாக்குதல் நடத்தியவர்கள் மூதாட்டியை அடித்துக் கொன்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், மூவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பிரதான சந்தேக நபர்களான மூவரை பொலிஸார் தேடி வந்தனர்.
பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கையில், பிரதான சூத்திரதாரிகளான இருவரும் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு இளைஞரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
0 comments:
Post a Comment