இலங்கையில் தடுப்பில் இருந்த இந்திய இழுவைப்படகுகள் மூன்று நேற்றையதினம் விடுவிக்கப்பட்டன.
கடற்படையினர் தமது இணையத்தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படகுகள் மூன்றும் இலங்கை கடலோர காவற்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
படகுகள் மூன்றும் திருகோணமலை இறங்குதுறையில் நிறுத்தி வைக்கப்பட்டு, இந்திய பொறியியலாளர்கள் குழுவினரால் திருத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment