இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் 'காப்பான்'. அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் மிக முக்கியமான ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
மோகன் லால், சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள், முடிந்துவிட்ட நிலையில், சூர்யாவுக்கான காட்சிகள் தனியாக எடுக்கப்பட்டன. எம்.பிரபு - கேமெரா மேன். எடுக்கப்பட்ட காட்சிகள் சிறப்பாக வந்ததால், யூனிட் ஆட்களுக்கு, சூர்யா, தனது சொந்த செலவில் சிறப்பான பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார்.
இதற்காக, தான் நடித்த படங்களில், இப்படியெல்லாம் பிரியாணி விருந்து கொடுக்கும் பழக்கம் சூர்யாவுக்கு கிடையாது. அஜித்தான், அவர் கையாலேயே பிரியாணி செய்து அசத்துவார். இப்போது சூர்யாவும் அந்த வழிக்கு வந்திருக்கிறார்.
இந்தப் படத்தை ஆகஸ்ட் 15ல், வெளியிட தயாரிப்பாளர் தரப்பு திட்டமிட்டுள்ளது.
0 comments:
Post a Comment