பிரதமர் ரணில் விக்ரமசிங்க வடக்கு மாகாணத்திற்கு கண்காணிப்பு விஜயமொ ன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். நாளை இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பிரதமர் ரணில், மூன்று நாட்களுக்கு வடக்கு மாகாணத்தில் தங்கியிருக்கவுள்ளார்.
இதன்போது, வலிகாமம் பிரதேச செயலகத்தில், புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தை பிரதமர் ரணில் திறந்து வைக்கவுள்ளார். மேலும், யாழ்.மாவட்டச் செயலகத்தில் பிரதமர் தலைமையில் கூட்டமொன்றை நடத்துவதற்கு நாளை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோன்று ஏனைய இரு நாட்களும் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் மக்களை நேரடியாக சென்று சந்திக்கும் செயற்பாட்டை தற்போது மேற்கொண்டு வருவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.
இதற்கு காரணம், அவர்கள் தங்களது கட்சியை பலப்படுத்தி நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றியீட்டும் செயற்பாடாகவே இவைகளை பார்ப்பதாக அரசியல் அவதானிகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment