மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்களின் பாராளுமன்ற தொகுதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் திரு கமல் ஹாசன் அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது சம்பந்தமான முதல் நடவடிக்கையாக, கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்திற்கான பொள்ளாச்சி தலைமை அலுவலகத்தில் இன்று முதல் 11 பாராளுமன்ற தொகுதிகளின் மாவட்ட, தொகுதி , பகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை துவங்கியுள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து 2 நாட்கள் நடைபெறவுள்ளது. ஆலோசனைக் கூட்டத்தில் தலைவருடன் துணைத்தலைவர் டாக்டர் R. மகேந்திரன் அவர்கள் மற்றும் பொதுச் செயலாளர் திரு ஆ.அருணாச்சலம் அவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஆலோசிக்கப்படும் தொகுதிகள்:
1. கோயம்புத்தூர்
2. பொள்ளாச்சி
3. திருப்பூர்
4. ஈரோடு
5. கரூர்
6. சேலம்
7. நாமக்கல்
8. நீலகிரி
9. தர்மபுரி
10. கிருஷ்ணகிரி
11. திண்டுக்கல்
முரளி அப்பாஸ்,
செய்தித் தொடர்பாளர்,
மக்கள் நீதி மய்யம்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment