நள்ளிரவில் விலையேறிய எரிபொருட்கள்

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.


இதற்கமைய ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 6 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 8 ரூபாவாலும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய இதுவரை 147 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒனிறின் புதிய விலை 152 ரூபாவாகும். இதுவரை 123 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 129 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இதுவரை 118 ரூபாவாகவிருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 126 ரூபாவாகும். இதுவரை 99 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்று 103 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.


Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment