அக்கரப்பத்தனை - ஹோல்புறூக் - லோவர் கிரன்லி தோட்டத்தில் குழந்தை ஒன்று நேற்று மாலை காணாமல் போயுள்ளது.
2 வயதுடைய ஆண் குழந்தை ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
குழந்தையை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, வெளியே சென்ற குழந்தை திடீரென காணாமல் போயுள்ளதாக, குழந்தையின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள பொலிஸார், பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment