ஒன்றரை மாதத்துக்கு சார்ஜ் இறங்காத ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒன்றரை மாதத்துக்கு சார்ஜே இறங்காத ஸ்மார்டபோனை ஆவெனிர் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.


தற்போது ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் இருக்கும் பெரிய பிரச்னையே சார்ஜ் தான். காலையில் எவ்வளவு நேரம் சார்ஜ் போட்டாலும், மாலைக்குள் மொத்த சார்ஜூம் தீர்ந்து விடுகிறது. குறிப்பாக பயணங்கள் மேற்கொள்ளும் போதெல்லாம், ஸ்மார்ட்போன் ஸ்விட்ச் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பாட்டு கூட கேட்க முடியாமல் செல்பவர்களும் உண்டு. இந்த பிரச்னைகளில் இருந்து தப்பிக்க பலர் பவர் பேங்க் பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும் ஒரு கூடுதல் சுமை தான். 

இந்நிலையில், ஒரு முறை சார்ஜ் செய்தால், 50 நாட்களுக்கு சார்ஜே இறங்காத ஸ்மார்ட்போனை ஆவெனிர் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரீசை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. தற்போது ஸ்மார்ட்போன் பயனாளர்களின் தேவையை உணர்ந்து Energizer Power Max P18K Pop என்ற ஸ்மார்ட்போனை தயாரித்துள்ளது. இதற்காக 18,000mAh சக்தி கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே, இதிலிருந்து அவ்வளவு எளிதாக சார்ஜ் இறங்கிவிடாது. தற்போது அதிகபட்சமாக 5,000 mAh பேட்டரி சக்தி கொண்ட ஸ்மார்ட்போன் தான் பரவலாக விற்பனையில் உள்ளது. வரும் ஜூன் மாதம் சந்தைக்கு வருகிறது இந்த ஸ்மார்ட் போன்.

Processor: Qualcomm Snapdragon 636 processor
Sim: Dual Sim
Android: Orio Pie 9.0
Dislay: 6.2in, Full HD
RAM: 6 GB
Finger Print Sensor
in-built memory: 128 GB
நிறம்: கருப்பு, ஊதா ஆகிய இரு நிறங்களில் கிடைக்கிறது.
முன்புற கேமரா: 16 MP
பின்புற கேமரா: 12+5+2MP
Battery: 18,000 mAh
Share on Google Plus

About Thana Samugam

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment