கொழும்பு, பன்னிப்பிடிய - தேபானம - அரலியஉயன சந்தியில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட நபர் பாதாள உலக குழு உறுப்பினராக இருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த நபருக்கு எதிராக கொள்ளை மற்றும் குற்றச்சாட்டுக்கள் பொலிஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பல பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு சடலம் மீட்கப்பட்டதுடன் வெற்றுத் தோட்டாக்கள் இரண்டும் பொலிஸாரால் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கருத்து முரண்பாடு காரணமாக வீட்டிலிருந்து வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது.
0 comments:
Post a Comment