யேமன் மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் கொண்டு செல்லப்படுவதை பன்னாட்டுச் சமூகம் உறுதி செய்ய வேண்டும் எனப் பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கத்தோலிக்கக் கிறித்தவ மதத் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸ் முதன்முறை யாக இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு இராஜ்யத்திற்கு சென்றுள்ளார்.
குறித்த விஜயத்திற்கு முன்னர் யேமனில் நீடிக்கும் முற்றுகை குறித்து பேசிய போதே பாப்பரசர் பிரான்சிஸ், யேமன் மக்கள் குறித்து கவலை வெளியிட் டுள்ளார்.
இந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரின் கூக்குரலானது கடவுளிடம் இருந்து எழுகிறது எனவே அவர்களுக்கு உணவு, குடிநீர், மருந்து ஆகியவை சென்று சேர்வதைப் பன்னாட்டுச் சமூகம் உறுதிசெய்ய வேண்டும் எனப் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்குறித்த விஜயத்தில் அவர் உரையாற்ற உள்ள இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment