படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான விசாரணைகளை மேற்கொள் வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குழுவின் விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது.
அதன்படி குறித்தக் குழுவின் கூட்டம் இன்று விவசாய திணைக்களத்தில் முற் பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்துவது தொடர்பான யோசனை கள் முற்வைக்கப்படவுள்ளன.
பயிர்ச்செய்கையில் அண்மையில் ஏற்பட்டுள்ள படைப்புழுவின் தாக்கம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்தும் வழிகள் குறித்து விளக்கமளிக்கும் உயர்மட்டக் கலந்துரையாடல்கள் நாட்டின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகி ன்றன.
அத்தோடு படைப்புழுவை ஒழிப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறினே மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கலந்துரையா டல்களும் இடம்பெற்றன.
மேலும் மறு அறிவித்தல் வரும்வரை பெரும்போக சோளம் பயிற்செய்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என விவசாயிகளுக்கு விவசாய திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment