நீர்த்தேக்கத்தில், மாணவி ஒருவரின் சடலமொன்று இன்று மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று நாட்களாக வீட்டில் இருந்து காணாமல் போயிருந்த மாணவியின் சடலமே மஸ்கெலியா - மவுசாகல நீர்த்தேக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த சடலம் மஸ்கெலியா - க்லென்டில்ட் தோட்டத்தைச் சேர்ந்த கொண்ட சௌந்தர்ராஜ் கீதலா (வயது-16) என்ற பாடசாலை மாணவியனது என அவரது பெற்றோர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மாணவி காணாமல் போயுள்ளதாக கடந்த தினத்தில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டார்.
உயிரிழந்த மாணவி கடந்த வருடம் சாதாரண தர பரீட்சையில் தோற்றி பெறுபேற்றை எதிர்ப்பார்த்திருந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment