ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க முடியாது, தமிழக அரசின் முடிவு சரிதான், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு பலரும் ஆதரவு அளித்து இருக்கின்றனர்.
இந்த வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாதிட்டது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றம் மட்டுமில்லாமல் தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வைகோ இந்த வழக்கில் தீவிரமாக வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடியில் கடும் எதிர்ப்பிற்கு இடையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் ஒரு மனுதாரராக வைகோ தரப்பும் வாதம் செய்தது. பல முக்கிய ஆதாரங்களை வைகோ தரப்பு இதில் அளித்தது.
ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வைகோவும் இன்னொரு மனுதாரராக மனுதாக்கல் செய்தார்.
அவர் பேசிய சில விஷயங்கள்,
- திருப்பூர் சாயப்பட்டறை வழக்கு, நொய்யல் ஆறு வழக்கு, வேலூர் தோல் தொழிற்சாலை வழக்குகளை எடுத்துக்காட்டாக கூறினார்.
- நீர்நிலைகள் மாசாவதை ஆதாரங்களுடன் சமர்பித்தார்.
- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எதை எல்லாம் கருத்தில் கொள்ளவில்லை என்பதை பட்டியலிட்டார்.
- விசாரணை கமிட்டி அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுமதி கிடையாது. ஆலை குறித்து விசாரணை ஆணையம் வெளியிட்ட அறிக்கையை ஏற்க கூடாது, என்றார்.
- தமிழக அரசு இதில் முக்கிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று கூறினார்.
இப்படி 20க்கும் மேற்பட்ட புகார்களை அந்த 45 நிமிடம் வைகோ பட்டியலிட்டார்.
#Sterlite #Vaiko #HighCourt #SterliteCopper #SterliteVaiko #IndianNews #TuticorinNews #TuticorinSterlite #TamilNewsKing
#Sterlite #Vaiko #HighCourt #SterliteCopper #SterliteVaiko #IndianNews #TuticorinNews #TuticorinSterlite #TamilNewsKing
0 comments:
Post a Comment