இலங்கையிலுள்ள அனைத்து வங்கி வலையமைப்பும் ஊடுருவப்பட்டுள்ளதாக இலங்கை பரிமாற்ற நிறுவனம் அறிவித்துள்ளது.
சமூக வலைத்தளமான வட்ஸ்அப் மூலம் இவ்வாறான போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் பிரதான இரண்டு வங்கி நிறுவனங்கள் ATM அட்டை கொடுக்கல் வாங்கல் மேற்கொள்வதனை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என வட்ஸ்அப் ஊடாக தகவல் பரவி வருகின்றது.
எனினும் இதுவொரு அடிப்படையற்ற போலியான செய்தி என இலங்கை பரிமாற்ற நிறுவனம் மறுத்துள்ளது. இலங்கையில் வங்கி கட்டமைப்புகள் எவையும் ஊடுருவப்படவில்லை. அவ்வாறு வட்ஸ்அப் தகவல்கள் கிடைத்தால் அதனை மற்றவர்களுக்கு பகிர்வதனை தவிர்க்குமாறு இலங்கை மக்களிடம் தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்கள் சிலர் மற்றும் அமைப்புகள் இணைந்து ATM இயந்திரம் ஊடாக பணம் கொள்ளையடிப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ATM இயந்திரங்கள் மூலம் பணம் எடுக்கும் போது மக்களை மிகவும் அவதானத்;துடன் செயற்படுமாறும் கூறுகின்றார்கள்.
அத்துடன் வங்கிகள் தொடர்பில் வெளிவரும் முரண்பாடான கருத்துக்களால் ஒட்டுமொத்த மக்களும் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றார்கள்.
0 comments:
Post a Comment