பெங்களூரு விமான கண்காட்சி நடைபெறும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
பெங்களூருவில் #AeroIndia2019 என்ற பெயரில் விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 21ம் திகதி தொடங்கிய கண்காட்சி வருகிற 25ம் திகதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று பெங்களூரு விமான கண்காட்சி நடைபெறும் இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கண்காட்சி தளத்தில் கார் பார்க்கிங் அருகே புற்களில் பற்றிய தீ வேகமாக பரவி; கார் பார்க்கிங் பகுதி முழுவதும் பரவியது. இதற்கான காரணம் தெரியவில்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். அத்துடன் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
100க்கும் மேற்பட்ட கார்கள் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
#Bengaluru #AeroIndia2019 #PlaneShow #FireAccident #Fire #CarParking #AndhraPradesh #AeroIndia2019 #TamilNewsKing
#Bengaluru #AeroIndia2019 #PlaneShow #FireAccident #Fire #CarParking #AndhraPradesh #AeroIndia2019 #TamilNewsKing
0 comments:
Post a Comment