பங்கதேஸ் தலைநகர் டாக்காவின் பழமையான இடங்களில் ஒன்றான சாவ்க்பஜாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென எரிவாயு சிலிண்டர் வெடித்து கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததில் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது அடுக்குமாடி குடியிருப்பு இரசாயன குடோனாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதில், திடீரென தீ ஏற்பட்டதால் ரசாயன குடோனில் பற்றிய தீ, அருகில் இருந்த 4 குடியிருப்பு பகுதிகளுக்கு பரவியதில் 70 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 200 தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர் கட்டுக்கடங்கா தீயினை போராடி அணைத்துள்ளனர்.
அத்துடன் தீவிபத்தால் சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள், 10 சைக்கிள்கள் முச்சக்கரவண்டியும் எரிந்து போய்யுள்ளன.
இருப்பினும், தீயில் சிக்கி 50 பேர் படுகாயங்களுடன் டாக்கா மருத்துவ
கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குடியிருப்பின் உள்ளே சிக்கிக் கொண்ட 12 பேர் வெளியேற முடியாமல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத் தீவிபத்திற்கு காரணம் ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் சேமிப்புக் கிடங்கு தான் என்றும் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ, ரசாயனம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் வேகமாகப் பரவி இருப்பதாக தீயணைப்புத்துறையினர் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment