திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டாவின் மூன்றாவது மாடியில் இருந்து 6 வயது சிறுமி தவறி விழுந்து இன்று உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
திருமலையில் உள்ள பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தும் கல்யாண கட்டா அருகே விளையாடிக்கொண்டே சந்திரிக்கா கல்யாண கட்டாவின் மூன்றாவது மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக அங்கிருந்து சந்திரிகாவை திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து திருமலை பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment