தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யை வைத்து அட்லீ இயக்கும் 'விஜய்-63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போது சென்னை பிரசாத் லேப் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டுள்ள க்ரீன்மேட் 'செட்'டில் இப் படத்தின் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.
படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடப்பதால் திட்டமிட்ட திகதிக்கு முன்னதாகவே படம் தயாராகிவிடும் என்று அட்லீ சொன்னதையடுத்து, இப் படத்தைத் தீபாவளிக்கு முன்னதாகவே அதாவது ஓகஸ்ட் மாதத்தில் வெளியிடத் திட்டமிட்டனர்.
இப்படி ஒரு தகவல் சமீபத்தில் பல்வேறு ஊடகங்களில் வெளியாகின. இந்த நிலையில் இந்த தகவல்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி, ''விஜய்-63' ரிலீஸ் குறித்து இப்போது வரும் தகவல்களில் சிறிதும் உண்மையில்லை! 'விஜய்-63' ஏற்கெனவே திட்டமிட்டபடி தீபாவளிக்குதான் வெளியாகும்' என்று தெரிவித்துள்ளார்.
தீபாவளிக்கு முன்னதாக ஓகஸ்ட் மாதத்தில் விஜய்-63 வெளியாக இருப்பதாக செய்தி வெளியானதன் பின்னணி என்ன?
அப்படி ஒரு எண்ணத்தில் ஏஜிஎஸ் படநிறுவனத்தினர் இருந்தது உண்மைதான் என்றும், அதற்கு விஜய் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு வெளியாகினால்தான் படத்துக்கு மிகப்பெரிய ஓப்பனிங்கும், வசூலும் இருக்கும், சர்கார் படத்தின் முதல்நாள் வசூலான 33 கோடியை இந்தப்படம் மிஞ்ச வேண்டும் என்று நினைக்கிறாராம் விஜய்.
0 comments:
Post a Comment