தலைமைச்செயலகத்தில் 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தமிழகத்தில் சிறந்த பெண் என கௌரவித்து 1 லட்சம் ரூபாய் காசோலை வழ்ங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாணவி ரக்ஷனா
80000 மரக்கன்றுகளை நானே விதைத்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி இருக்கிறேன்.1600 பேருக்கு கண்தானத்திற்காக வீடு வீடாக பதிவு செய்து கொடுத்திருக்கிறேன். மேலும் 50,000 பேருக்கு திடீர் விபத்துக்கள் ஏற்படுவது குறித்து 19 வகையான பயிற்சியும் அளித்து இருக்கிறேன். குறிப்பாக வறட்சி காலங்களில் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயத்திற்கு பயன்படும் வகையில் பைப் முறையை தெரியப்படுத்துகிறேன். இதுபோக நான் எட்டு வருடமாக சேமித்துவைத்த 15,000 ரூபாயை மூன்று பள்ளி மாணவிகளுக்கு படிப்பு செலவிற்கு தலா 5000 என கொடுத்திருக்கிறேன். இதனிடையே இந்தியா முழுவதும் விதை பந்துகளை விமானம் மூலம் தூவ வேண்டும் என்பதற்காகவும், பறவை இனங்களை வேட்டையாடுவதை தடை செய்ய வேண்டும் என்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், டெல்லியில் உள்ள ஐநா சபையின் செயலாளருக்கும் என்னுடைய செலவில் 45000 ரூபாய் கொண்டு தபால் அனுப்பி இருந்தேன். இந்த சேவைக்காக மாநில சமூக நலத்துறையாளர் சிறந்த பெண்ணாக தேர்வு செய்து முதலமைச்சரிடம் கௌரவிக்கப்பட்டு 1 லட்ச ரூபாய் காசோலையும் கொடுத்திருக்கிறார்கள். இந்த ஒரு லட்ச ரூபாயை தமிழகத்தில் விதை பந்து தூவும் சட்டத்தை கொண்டுவந்தால் முதல் நிதியாக இந்த காசோலையை நான் கொடுத்துவிடுவேன்.
பேட்டி
ரக்ஷனா
கரூர் மாவட்டம்
0 comments:
Post a Comment