தோட்டத் தொழிலாளர்களுக்கு நிவாரண நிதியாக 50 ரூபா

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களது நாளாந்த சம்பளம் அரசின் நிவாரண நிதியாக 50 ரூபாவை இணைப்பதற்கு கொள்கை ரீதியாக இணங்கப்பட்டுள்ளது.

ஒரு வருடக் காலப்பகுதிக்கு மாத்திரம் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என்று பெருந்தோட்டக் கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

தேயிலை சபையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் அரசுக்கும் இடையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன.

இதற்கு அமைவாக நாளாந்தம் 50 ரூபாவை பெருந்தோட்டத் தொழிலளார்களது சம்பளத்துடன் இணைத்து வழங்குவதற்கு அரசு இணக்கம் தெரிவித்துள்ளது.

தேயிலை சபையின் நிதியில் இருந்து இதற்காக 1.2 பில்லியன் ரூபா கடன் அடிப்படையில் ஒதுக்கப்படும் என்றும், இந்தக் கடனை அரசு பின்னர் தேயிலைச் சபைக்குச் செலுத்தும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான அமைச்சரவை யோசனையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய இணங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Share on Google Plus

About Editor LTS

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment