நீர்கொழும்பு - பொரதொட பிரதேசத்தில் ஒருதொகை ஹெரோயின் மற்றும் ஹேஷ் போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு நேற்று இரவு மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேநபர் கைது செய்யப்பட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து, 05 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஹேஷ் போதை பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் சிற்றூந்தில் பயணித்து கொண்டிருந்த போது சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment