கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் பேலியகொட பகுதியில் வைத்து கைதானார்கள் இவர்களிடமிருந்து 40 மில்லியன் ரூபா பெறுமதியான 400 கிலோ கிராம் கேரளக் கஞ்சா மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை வேன் ஒன்றில் இவை எடுத்துச் செல்லப்படும் போது திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment